பிக்கி பெண்கள் அமைப்பின் 34-வது வருடாந்திர அவை கூடுகை
April 20 , 2018 2412 days 769 0
இந்திய குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் புது தில்லியில் நடைபெற்ற பிக்கி பெண்கள் அமைப்பின் 34-வது வருடாந்திர அவை கூடுகையில் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார்.
பிக்கி பெண்கள் அமைப்பின் 34-வது வருடாந்திர அவை கூடுகையின் கருப்பொருள் “இந்தியாவை மாற்றிடும் பெண்கள்” (WOMEN TRANSFORMING INDIA) என்பதாகும்
இந்த கூடுகையின் நினைவாக, தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் அல்லது வணிகத்தில் உச்சத்தைத் தொட்ட மற்றும் தங்களது பணிக் களத்தில் உத்வேகமூட்டும் தலைவராக (inspirational leaders) உள்ள 9 இந்திய பெண் சாதனையாளர்களுக்கு பிக்கி பெண்கள் அமைப்பின் நினைவு விருதினை (FLO ICON AWARDS ) வழங்கி பிக்கி பெண்கள் அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக, அமைப்புசார் பொருளாதாரத் துறைகளில் (formal sector) நிலவும் பாலின சமத்துவத்தின் அளவினை மதிப்பிட பாலின சமத்துவ குறியீடு (Gender Parity Index) ஒன்றும் உருவாக்கப்பட்டு வருகின்றது.
பிக்கி பெண்கள் அமைப்பு
இந்தியாவில் தொழில்துறை மற்றும் வர்த்தகத்திற்கான உச்சபட்ச அமைப்பான வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வணிகக் கழகங்களினுடைய சம்மேளனத்தின் (Federation of Indian Chamber of Commerce & Industry -FICCI) ஒரு பிரிவாக 1983 ஆம் ஆண்டு பிக்கி பெண்கள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
பிக்கி அமைப்பின் மகளிர் பிரிவே (women wing) பிக்கி பெண்கள் அமைப்பாகும்.