TNPSC Thervupettagam

பிஜீ சுவஸ்தியா கல்யாண் யோஜனா

June 20 , 2018 2222 days 716 0
  • ஒடிஸா முதலமைச்சர் நவீன் பட்நாயக் “பிஜீ சுவஸ்திய கல்யாண் யோஜனா” (Biju Swasthya Kalyan Yojana) எனும் சுகாதார உறுதிப்பாட்டுத் திட்டத்தை (Health assurance scheme) அறிவித்துள்ளார்.
  • பிஜீ சுவஸ்திய கல்யாண் யோஜனா திட்டமானது ஒடிஸா மாநிலத்தின் 70 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த5 கோடி மக்களுக்கு பயன் தர உள்ளது.

  • பிஜீ சுவஸ்திய கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 லட்சம் ரூபாய் வரை மதிப்புடைய இரண்டாம் நிலை (Secondary) மற்றும் மூன்றாம் நிலை (Tertiary) பணமில்லா சுகாதார  மருத்துவ உதவிகள் (Cashless healthcare assistance) வழங்கப்படும்.
  • மேலும் இத்திட்டத்தின் கீழ் பொது சுகாதார மருத்துவமனைகளுக்கு வருகை புரிகின்ற அனைத்து மகப்பேறுடைய பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்    உதவித் தொகையாக (Assistance) ரூ.500 வழங்கப்படும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்