TNPSC Thervupettagam

பிடியாணை பெறத் தகு குற்றங்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

January 10 , 2025 3 hrs 0 min 17 0
  • மிகவும் கடுமையான மற்றும் சாதாரண குற்றங்கள் தொடர்பான காவல் துறை விசாரணைகளுக்கான அளவுருக்களை உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.
  • நீதிமன்றம் பிடியாணையின்றி கைது செய்வதற்குரிய குற்றம் மற்றும் பிடியாணை பெறத்தகு குற்றங்களை வேறுபடுத்தியுள்ளது என்பதோடு பிடியாணை பெறத் தகு குற்றங்களுக்கான பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
  • குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) 167வது பிரிவானது, விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரை வெவ்வேறு வகையான காவலில் வைக்க நீதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது.
  • 167வது பிரிவின் துணைப் பிரிவு (2) ஆனது, காவலில் வைப்பதற்கான நடைமுறையை வகுத்துள்ளதோடு, காவலில் ஒருவரை வைத்திருக்க 15 நாட்கள் வரை என்ற அதிகபட்ச வரம்பினை நிர்ணயித்துள்ளதால் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
  • பிடியாணையின்றி கைது செய்வதற்குரிய குற்றங்கள் என்பவை, முன் அனுமதியின்றி அதற்கான விசாரணையைத் தொடங்க காவல்துறைக்கு அனுமதியளிக்கின்றன.
  • பிடியாணை பெறத் தகு குற்றங்களுக்கு காவல்துறை நடவடிக்கை எடுப்பதற்கு முன் அதற்கு நீதிபதியின் உத்தரவு அவசியமாகும்.
  • தனி மனித உரிமைகள் மற்றும் மாநில அதிகாரங்களுக்கு இடையே சமநிலையைப் பேணுவதற்கு இந்த வேறுபாடு முக்கியமானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்