TNPSC Thervupettagam

பிட்ச் மதிப்பீடு

June 21 , 2018 2350 days 785 0
  • மதிப்பீட்டு நிறுவனமான பிட்ச் (Fitch) நிறுவனம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா  மற்றும் பேங்க் ஆஃப் பரோடா  ஆகியவற்றின்   இயலுமைத் தன்மை  மதிப்பீடுகளை (viability ratings-VRs) குறைத்துள்ளது.
  • பிட்ச் நிறுவனமானது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகியவற்றை ஓர் தரமதிப்பீட்டில் படிநிலையை (One-notch) குறைத்து  “BB+” மற்றும் “BB” எனும் வரிசையில் மதிப்பிட்டு அவற்றின் நம்பகத் தன்மை மதிப்பீடுகளைக் குறைத்துள்ளது.
  • இச்செயல்முறையானது இந்த கடன் வழங்குநர்களின் மோசமான சொத்து தரத்தின் (Poor asset quality) காரணமாக அவர்களின் வலுவிழந்த இடர் விவரங்களை (Risk profile) காட்டுகின்றது. மேலும் அவற்றின் மூலதன இடர் தாங்கிகள் (Capital buffers) மிதமான பொருளாதார அதிர்வுகளுக்கு (Moderate shocks) பாதிப்பிற்குள்ளாகக் கூடிய நிலைமையைக் காட்டுகின்றது.
  • கடந்த நிதி ஆண்டில் இந்தியாவில் 21 தேசிய வங்கிகளில் 19 வங்கிகள் இழப்புகளைக் கண்டுள்ளன. கிட்டத்தட்ட கடந்த நிதி ஆண்டில்  அரசினால் வங்கிகளின் நலனிற்காக மூலதன உதவியாகப் புகுத்தப்பட்ட (Capital injections) 13 மில்லியன் டாலர்களும் ஒட்டுமொத்தமாக நட்டத்திற்குள்ளாகி உள்ளது.
  • பிட்ச் நிறுவனமானது இந்திய வங்கிகள் மீது எதிர்மறை துறை கண்ணோட்டத்தை (Negative sector outlook) கொண்டுள்ளது. இருப்பினும் நிலையான கண்ணோட்டத்தோடு பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா  ஆகியவற்றின் “BBB நீண்ட கால வழங்குநர் இயல்பு மதிப்பீடுகளை  (‘BBB’ Long-Term Issuer Default Ratings-IDRs) உறுதி செய்துள்ளது.

BBB மதிப்பீடு

  • BBB மதிப்பீடானது கடனளிப்பவர் தன்னுடைய கடன் கடப்பாடுகளை (debt obligations) சந்திப்பதற்கான நடப்பு திறனைக் கொண்டுள்ளார், ஆனால் அவர் வணிகம், நிதியியல், பொருளாதார நிலைமைகள் அளவிடும் வகையில் மாறுபடும் போது A வகை தர மதிப்பு விவகாரங்களை விட அதிகமாக மற்றும் BB வகை தரமதிப்பு விவகாரங்களை விடக் குறைவாக  திவால் நிலை ஆபத்துகளை (solvency risk ) எதிர்கொள்கின்றார் என்ற கருத்தை எதிரொலிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்