TNPSC Thervupettagam

பிணை மனு குறித்த ChatGPT மென்பொருளின் முடிவு

April 4 , 2023 472 days 303 0
  • கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் பிணை மனு குறித்து முடிவெடுப்பதற்காக ஒரு இந்திய நீதிபதி ChatGPT மென்பொருளினைப் பயன்படுத்தியுள்ளார்.
  • இந்தியாவில் ஒரு நீதிமன்றத்தினால் செயற்கை நுண்ணறிவுப் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி அனூப் சிட்காரா தலைமையிலான ஒரு அமர்வானது ஜஸ்விந்தர் சிங் என்பவரின் பிணை மனுவை விசாரிக்கும் போது செயற்கை நுண்ணறிவு மென்பொருளின் கருத்தை நாடியது.
  • அவர் மீது கலவரம், குற்றவியல் சார்ந்த மிரட்டல், குற்றவியல் சதி மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டுகள் உள்ளன.
  • "வழக்கின் குறிப்பிட்ட சூழ்நிலைகள்" மற்றும் அதிகார வரம்பின் "சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள்" ஆகியவற்றைப் பொறுத்துப் பிணை வழங்கப்படும் என்று அந்த மென்பொருள் பதிலளித்தது.
  • இறுதியாக, சிங் மீது இரண்டு கொலை முயற்சி வழக்குகளின் குற்றவியல் பதிவு பின்னணி இருப்பதால் அவருக்குப் பிணை மறுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்