சிறு குறு விவசாயிகளுக்கு உதவி செய்திடும் நோக்கில் பிணையற்ற விவசாயக் கடன்களுக்கான வரம்பை இந்திய ரிசர்வ் வங்கி தற்போதைய 1 லட்சம் என்பதிலிருந்து 1.6 லட்சத்திற்கு உயர்த்தியிருக்கின்றது.
மேலும் விவசாயக் கடனை மறு ஆய்வு செய்யவும் சாதகமான கொள்கை முடிவுகளை ஏற்படுத்திடவும் ஒரு உள்ளக செயற்குழுவை அமைத்திடவும் முடிவெடுத்திருக்கின்றது.
இந்த ஒரு லட்ச ரூபாய் வரம்பு 2010 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது.
அதற்குப் பிறகிலிருந்து ஏற்பட்ட விவசாய இடுபொருட்களின் விலை ஏற்றத்தையும் ஒட்டு மொத்தப் பணவீக்கத்தையும் கருத்தில் கொண்டு பிணையற்ற விவசாயக் கடன்களின் வரம்பை அதிகரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது.
இது முறையான கடன் வழங்கு முறையில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் பயனாளிகளின் அளவை உயர்த்தும்.