TNPSC Thervupettagam

பினாகா ஆயுத அமைப்பு

November 24 , 2024 16 hrs 0 min 23 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆனது, வழிகாட்டுதலுடன் கூடிய  பினாகா பல் குழல் உந்துகணை ஏவுதல் (MBRL) அமைப்பின் ஏவுதல் சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
  • இது பினாகா அமைப்பின் தாக்குதல் வரம்பினை சுமார் 75 கிலோ மீட்டருக்கும் மேல் உயர்த்துகிறது.
  • தற்போது, ​​இந்த அமைப்பில் இரண்டு வகைகள் உள்ளன.
  • அவற்றுள் முதலாவது 40 கிலோமீட்டர் தூர வரம்புடைய மார்க் I, இரண்டாவது 75 கிலோ மீட்டர் தூர வரம்புடைய மார்க் II ஆகும்.
  • மேலும் இதன் தாக்குதல் வரம்பினை சுமார் 120 கிலோ மீட்டர் தூர வரம்பு வரையிலும், பின்னர் 300 கிலோ மீட்டர் வரையிலும் மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இது ஒவ்வொரு 4 வினாடிக்கும் ஒரு உந்துகணை என்ற சரியான வீதத்தில், வெறும் 44 வினாடிகளில் அனைத்து 12 உந்துகணைகளையும் சால்வோ என்ற முறையில் (ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை ஏவுதல்) ஏவக் கூடிய திறன் கொண்டது.
  • பினாகா உந்துகணை ஏவுதல் அமைப்பானது, அமெரிக்க நாட்டின் ஹிமர் ஆயுத அமைப்பிற்கு இணையானதாகக் கருதப்படுகிறது.
  • இதனை வாங்குவதற்கான முதல் ஆணையினை ஆர்மேனியா பதிவு செய்தது.
  • தற்போது பிரான்சு அரசும், இந்த அமைப்பினை வாங்குவதற்கு ஆர்வம் காட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்