அடுத்த 5 ஆண்டுகளில் புதிய இந்தியாவை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கோடு ஒத்திசையும் வகையில் மத்திய அரசு 115 பின்தங்கிய மாவட்டங்களை 2022ம் ஆண்டிற்குள் துரிதமாக மேம்படுத்திட தேர்வு செய்துள்ளது.
இந்த 115 பின் தங்கிய மாவட்டங்களில்
இடது சாரி பயங்கரவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட 35 மாவட்டங்கள்
இடது சாரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட 55 மாவட்டங்கள்
ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட 15 மாவட்டங்கள்
-ஆகியவை அடங்கும்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு பதவிகளில் உள்ள கூடுதல் செயலாளர்கள் மற்றும் கூட்டு செயலாளர்கள் என்ற உயர்மட்ட அளவில் உள்ள மூத்த அதிகாரிகள் “பிரபஹாரி “என்ற பெயரில் நியமிக்கப்படுகின்றார்கள்.
பிரபஹாரி அலுவலர்களின் முதல் கூட்டம் சமீபத்தில் புதுதில்லியில் அமைச்சரவை செயலாளரின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய மத்திய அமைச்சகங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
மனித வளர்ச்சிக் குறியீட்டில் வியத்தகு மேம்பாடு அடையவும், நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலையை மேம்படுத்திடவும், இந்த பின் தங்கிய மாவட்டங்களின் மேம்பாடு மிகவும் அவசியமான ஒன்றாகும்.