TNPSC Thervupettagam

பின்தொடர்ந்து துரத்திப் பிடித்தல்

May 24 , 2019 1918 days 605 0
  • இந்தியக் கடலோரக் காவல் படையானது குஜராத் கடற்கரையோரத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த மீன்பிடிக் கப்பலைப் “பின்தொடர்ந்து துரத்திப் பிடித்து” அதனைப் பறிமுதல் செய்துள்ளது.
  • இது ரூ.600 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மருந்துகளைப் பறிமுதல் செய்துள்ளது.
  • கடல்சார் கோட்பாடான “பின்தொடர்ந்து விரட்டிப் பிடித்தல்” என்ற விதியானது 1982 ஆம் ஆண்டில் கடல் சட்டம் மீதான ஐ.நா. ஒப்பந்தத்தின் (United Nations Convention on the Law of the Sea - UNCLOS) சரத்து 111-ல் விவரிக்கப்பட்டுள்ளது.
  • இது தங்கள் நாட்டின் எல்லைப் பகுதியில் மற்றும் நிலப் பகுதிகளில் செயல்பாட்டில் உள்ள சட்டங்களை மீறுகின்ற வெளிநாட்டைச் சேர்ந்த கப்பல்களைப் பறிமுதல் செய்யும் உரிமையை அங்கீகரிக்கின்றது.
  • இது தங்கள் நாட்டின் எல்லைக்கு அப்பால் இருக்கும் எதிரி நாட்டுக் கப்பல்களைப் பறிமுதல் செய்து, அதன் பின்பு அதன் மீதான விசாரணையை மேற்கொள்ள அனுமதிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்