நவம்பர் 23 ஆம் தேதியானது, மாதம்/தேதி வடிவில் (11/23) எழுதப் பட்டால், அன்று பிபனாச்சி எண் என்ற தினம் கொண்டாடப் படுகிறது
இந்த தேதியில் உள்ள இலக்ககங்கள் 1,1,2,3 என்ற பிபனாச்சி என்ற எண் வரிசையை வரிசையை உருவாக்குகின்றன.
எண்களின் தொடரான பிபனாச்சி வரிசை என்பது ஒரு தொடரில் ஒரு எண் அதற்கு முன் உள்ள இரண்டு எண்களின் கூட்டுத் தொகையாகும்.
1202 ஆம் ஆண்டில் இத்தாலிய நாட்டு கணிதவியலாளர் லியோனார்டோ பிபனாச்சி தனது “லிபர் அபாசி” என்ற புத்தகத்தின் மூலம் இந்த பிபனாச்சி வரிசையினை மேற்கு நாடுகளில் அறிமுகப்படுத்தினார்.