TNPSC Thervupettagam

பிம்ஸ்டெக் பேரிடர் மேலாண்மை பயிற்சி

October 11 , 2017 2476 days 829 0
  • முதலாவது பிம்ஸ்டெக் பேரிடர் மேலாண்மை பயிற்சி (BIMSTEC Disaster Management Exercise-2017) புதுதில்லியில் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDRF – National disaster Response Force) இப்பயிற்சியினை நடத்தியது.
  • பேரிடர் ஆபத்துக் குறைப்பு (DRR – Disaster Risk Reduction), பிராந்திய ரீதியிலான பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைப்பு மற்றும் பேரிடர்களை எதிர்கொள்ளும் திறன்களை பிம்ஸ்டெக் நாடுகளிடையே பகிர்வதற்கான தளமாக இப்பயிற்சி நடத்தப்படுகிறது.
பிம்ஸ்டெக்
  • தெற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த ஏழு நாடுகளின் துணை பிராந்திய கூட்டமைப்பே பிம்ஸ்டெக் ஆகும்.
  • பிம்ஸ்டெக் உறுப்பினர் நாடுகள்:
    • இந்தியா
    • இலங்கை
    • வங்கதேசம்
    • பூடான்
    • நேபாளம்
    • மியான்மர்
    • தாய்லாந்து

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்