BIMSTEC (பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு – Bay of Bengal initiative multi-sector technical and economic cooperation) மாநாடானது விசாகப் பட்டினத்தில் நடைபெற இருக்கின்றது.
1997 ஆம் ஆண்டில் பிம்ஸ்டெக் உருவானதிலிருந்து விசாகப் பட்டினத் துறைமுக அமைப்பானது முதன்முறையாக இந்த மாநாட்டை நடத்துகின்றது.
இந்த மாநாட்டில் வங்க தேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் உள்ளிட்ட ஏழு உறுப்பு நாடுகள் பங்கேற்கின்றன.