இந்தியா, பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு அமைப்பின் (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation- BIMSTEC) முதல் ராணுவப் பயிற்சியை 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மகாராஷ்டிராவின் புனேவில் நடத்த இருக்கின்றது.
இந்தப் பயிற்சியின் கருத்துரு இடைநகரங்களில் தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சியையும் சுற்றி வளைத்தல் மற்றும் தேடுதல் பயிற்சிகளையும் கொண்டதாக இருக்கும்.
இந்த ராணுவப் பயிற்சியின் முக்கிய நோக்கம் உறுப்பு நாடுகளிடையே யுக்திகள் இணக்கத்தை மேம்படுத்துவதையும், தீவிரவாத எதிர்ப்புப் பிரிவில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்திடுவதையும் கொண்டதாக இருக்கும்.
2017-ம் ஆண்டு புதுதில்லியில் பிம்ஸ்டெக் நாடுகள் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் ஈடுபட்டன. ஆனால் இதுவே இந்த அமைப்பிற்கான முதல் ராணுவப் பயிற்சியாகும்.