பிம்ஸ்டெக்கின் (BIMSTEC) 15-ஆவது அமைச்சரவைக் கூட்டம்
August 12 , 2017 2763 days 1252 0
15th-வது பிம்ஸ்டெக்கின் (BIMSTEC) அமைச்சரவைக் கூட்டம் ஆகஸ்ட் 11-ம் தேதி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பிறகு 18-வது பிம்ஸ்டெக்கின் (BIMSTEC) மூத்த உயர் அதிகாரிகள் அளவிலான கூட்டம் நடைபெற்றது.
பிம்ஸ்டெக் (BIMSTEC)
பிம்ஸ்டெக் (BIMSTEC - Bay of Bengal Initiatives for Multi-Sectoral Technical and Economic Cooperation) என்ற துணைப் பிராந்தியக் குழுவானது தெற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் ஏழு நாடுகளை உள்ளடக்கியது. (அந்நாடுகள்: பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம்).
1997 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி பாங்காக்கில் பிஸ்டெக் (BIST-EC என்ற பங்களாதேஷ், இந்தியா, இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளின் பொருளாதாரக் கூட்டிணைவு) என்கிற புதிய துணைப் பிராந்தியக் குழு தொடங்கப்பெற்றது. பின்னர் இதில் மியான்மரும், நேபாளமும் இணைந்து பிம்ஸ்டெக் என்று ஆயிற்று.
இந்த பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பிற்கு நேபாளம் தற்போது தலைமை வகிக்கிறது. இதன் செயலகம் டாக்காவில் அமைந்திருக்கிறது.