2020ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதியன்று தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழா நடைபெற்றது.
உலகின் மிகப்பெரிய மற்றும் சிறப்பு வாய்ந்த பிரகதீஸ்வரர் கோவிலானது கி.பி 1003 மற்றும் கி.பி 1010 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் சோழப் பேரரசரான முதலாம் ராஜராஜன் (கி.பி. 985-1014) என்பவரால் கட்டப்பட்டது.
கடைசியாக இந்தக் கோவிலின் குடமுழுக்கு விழாவானது 1997 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
மதராஸ் உயர்நீதிமன்றமானது இந்தக் கோவிலின் குடமுழுக்கை ஆகம விதிப்படி நடத்த வேண்டும் என்றும் மந்திரங்களை தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கூற வேண்டும் உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குடமுழுக்கின் போது ஓதுவார்களைக் கொண்ட ஒரு குழுவானது தேவாரம், திருவாசகம், திருமுறை போன்ற பிற தமிழ் மந்திரங்களைக் கூற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இம்மாதிரியாக தமிழில் குடமுழுக்கு செய்யப் படுவது இந்தக் கோவிலில் இதுவே முதல் முறையாகும்.