ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு (AI) கருவி மற்றும் ஒரு முழு தானியங்கி செயல் முறையானது அதன் முதல் மீயொளிர் விண்மீன் வெடிப்பினை மிகவும் வெற்றிகரமாக கண்டறிந்து, அடையாளம் கண்டு, வகைப்படுத்தியுள்ளது.
இக்கருவி SN2023tyk என்ற புதிய மீயொளிர் விண்மீன் வெடிப்பினைக் கண்டறிந்தது.
இந்த செயற்கை நுண்ணறிவுக் கருவியானது BTSbot- பிரகாச மாறுநிலை ஆய்வு கருவி என அழைக்கப்படுகிறது.
இதற்கு 16,000 வானியல் மூலங்களிலிருந்து பெறப்பட்ட 1.4 மில்லியனுக்கும் அதிகமான ஆய்வுப் படங்கள் கொண்டு பயிற்சியளிக்கப்பட்டது.