TNPSC Thervupettagam
December 4 , 2017 2576 days 880 0
  • பொது ஒலிபரப்புத்துறை அமைப்பான பிரசார் பாரதியின் தலைவராக முன்னாள் இதழியலாளரான A. சூர்ய பிரகாஷ் இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பிரசார் பாரதி அமைப்பானது தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனலையும், அனைத்திந்திய (All India Radio) வானொலியையும் நடத்துகின்றது.
  • இதற்கு முன் முதல் முறையாக சூர்ய பிரகாஷ் 2014ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெற்றிருந்தார்.
  • இந்த அமைப்பிற்கு மீண்டும் தலைவராக பிப்ரவரி 2020 வரை இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • துணை குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடுவை தலைவராக கொண்ட மூன்று பேர் குழு இவரை நியமிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரசார் பாரதி

  • பிரசார் பாரதி அமைப்பானது பிரசார் பாரதி சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தன்னாட்சியுடைய சட்ட அமைப்பாகும்.
  • இது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
  • இது 1997 ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது.
  • இது நாட்டின் ஒலிபரப்பு சேவையை வழங்கும் பொதுத்துறை நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்