பிரதம மந்திரி கூட்டு ஆராய்ச்சித் திட்டம் நிறைவேற்றப்படுதல்
February 12 , 2018 2480 days 782 0
மத்திய அமைச்சரவை “பிரதம மந்திரி கூட்டு ஆராய்ச்சித் திட்டத்தை“ நிறைவேற்றுவதற்கு அனுமதியளித்துள்ளது. இத்திட்டம் 2018-2019ம் நிதியாண்டில் ஏழு ஆண்டுகள் என்ற கால அளவில் 1650 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும்.
இந்தத் திட்டம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மூலம் 2018-19ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் Indian Institute of Science (IISc), Indian Institutes of Technology (IITs), National Institutes of Technology (NITs), Indian Institutes of Science Education and Research (IISERs) மற்றும் Indian Institutes of Information Technology (IIITs) போன்ற கல்லூரிகளிலிருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாடத்தில் பி.டெக் அல்லது ஒருங்கிணைந்த எம்.டெக் அல்லது எம்.எஸ்சி போன்ற பட்டங்களில் சிறந்த மாணவர்களுக்கு அல்லது அப்படிப்புகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு IIT மற்றும் IISCயில் பி.எச்.டி படிப்பிற்கான நேரடி சேர்க்கை அளிக்கப்படும்.
இந்தத் திட்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உள்நாட்டிலேயே ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக நாட்டிலுள்ள திறமைக் களஞ்சியத்தை தேர்ந்தெடுக்க உதவும்.