பிரதம மந்திரி சஹஜ் பிஞ்லி ஹர் கர் யோஜனா (செளபாக்யா)
September 26 , 2017
2617 days
841
- நாட்டின் கடைக்கோடி வரை அனைத்து நகர்ப்புற மற்றம் கிராமப்புற வீடுகளுக்கு மின் இணைப்பை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- இத்திட்டத்தின் கீழ் மின் இணைப்பு சாதனங்களான மின்மாற்றிகள் (transformers), மீட்டர் கருவிகள், மின் கம்பிகள் (Wire) போன்றவற்றிற்கு மானியம் வழங்கப்படும்.
- இதன் மூலம் அரசு 2019க்குள் அனைவருக்கும் 24×7 மின் சேவையை வழங்க இலக்கிட்டுள்ளது.
சௌபாக்கியா திட்டத்தில் உள்ளடங்கியவன
- வெளிச்சத்திற்கு மண்ணெண்ணெய்க்கு மாற்றாக மின் இணைப்பை அளித்து சுற்றுச்சூழலை மேம்படுத்துதல்.
- கல்விச் சேவையில் மேம்பாடு அளித்தல்
- சிறந்த சுகாதார சேவையை அளித்தல்
- ரேடியோ (வானொலி), தொலைக்காட்சி, அலைபேசி வழியே மேம்பட்ட இணைப்பு
- மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை அளித்தல் குறிப்பாக பெண்களுக்கு மேம்பட்ட வாழ்க்கைத்தரத்தை அளித்தல்
- பொருளாதார செயல்பாடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரித்தல்.
Post Views:
841