பிரதம மந்திரி சூர்யா கர்: முஃப்த் பிஜிலி யோஜனாவைத் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டம் 75,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு மாதமும் 300 அலகு வரை இலவச மின்சாரம் வழங்குவதன் மூலம் 1 கோடி வீடுகளுக்கு ஒளியூட்டுவதை இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
2 கிலோவாட் வரை திறன் கொண்ட சூரிய சக்தி உற்பத்தி தகடுகளை வாங்குவதற்கு, குடும்பங்கள் ஒரு கிலோவாட்டிற்கு 30,000 ரூபாய் வரையிலும் மற்றும் 3 கிலோவாட் வரையிலான கூடுதல் திறன் கொண்ட சூரியசக்தி உற்பத்தி தகடுகளை வாங்குவதற்கு ஒரு கிலோவாட்டிற்கு 18,000 ரூபாய் வரையிலும் மானியம் பெறலாம்.