பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பிரதம மந்திரி ரோஜ்கர் புரோத்சகன் யோஜனாவின் நோக்கத்தை மேம்படுத்துவதற்கான முன்மொழிவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு, பணியாளர்களுக்கு அவர்கள் பணியில் சேர்ந்த முதல் மூன்று ஆண்டுகளுக்கு தன்னுடைய முழு பங்களிப்பை அளிக்கும். அதோடு ஏற்கனவே பணியிலுள்ள பணியாளர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு தன்னுடைய பங்களிப்பை மேற்கொள்ளும்.
பிரதம மந்திரி ரோஜ்கர் புரோத்சகன் யோஜனா ஆகஸ்ட் 2016ல் இருந்து செயல்பாட்டில் உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், உலகளாவிய கணக்கு எண் கொண்ட (Universal Account Number - UAN) மாதம் ரூ. 15000 வரை சம்பளம் பெறும் புதிய ஊழியர்களின் (1 ஏப்ரல் 2016 மற்றும் அதற்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு) தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்திற்கு அவர்களுடைய 33% பங்களிப்பை அரசு மேற்கொள்ளும்.