TNPSC Thervupettagam

பிரதம மந்திரி ஸ்வஸ்தய சுரக்ஸ யோஜனா

May 10 , 2018 2265 days 667 0
  • மத்திய அமைச்சரவை நாடு முழுவதும் 20 அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்களை (All India Institute for Medical Sciences – AIIMS) அமைத்தல் மற்றும் 73 மருத்துவக் கல்லூரிகளை தரம் உயர்த்துதல் ஆகியவற்றிற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்த முடிவுகள் பிரதம மந்திரி ஸ்வஸ்தய சுரக்ஸ யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • பிரதம மந்திரி ஸ்வஸ்தய சுரக்ஸ யோஜனா திட்டம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு (2020 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி ஸ்வஸ்தய சுரக்ஸ யோஜனா திட்டம்

  • 2003-ல் அறிவிக்கப்பட்ட பிரதம மந்திரி ஸ்வஸ்தய சுரக்ஸ யோஜனா திட்டமானது, சுகாதாரத் துறையில் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது தொடர்பான மத்திய அரசால் நிதியளிக்கப்படும் திட்டமாகும்.
  • மலிவான மற்றும் நம்பகமான மூன்றாம் நிலை சுகாதார சேவைகள் கிடைப்பதில் இருக்கும் பிராந்திய சமநிலையற்ற தன்மையை (Regional Imbalances) சரிசெய்தல் மற்றும் நாட்டில் தரமான மருத்துவ கல்விக்கான வசதிகளை பெருக்குதல் ஆகியவற்றை இத்திட்டம் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்