ஆயுஷ்மான் பாரத்தின் கீழ் சிறப்பு வாய்ந்த பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தை (Pradhan Mantri Jan Aarogya Yojana-PMJAY) ஜார்க்கண்டின் ராஞ்சியில் பிரதமர் (செப்டம்பர் 23) துவக்கி வைத்தார்.
இந்த திட்டமானது 10.74 கோடி குடும்பங்களுக்கு அதாவது 50 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு ரூ.5 லட்சம் வருடாந்திர உடல்நல காப்பீட்டை வழங்குகிறது.
தெலுங்கானா, ஒடிசா, கேரளா, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் இந்த திட்டத்தில் சேர்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது 2011-ல் எடுக்கப்பட்ட சமூக-பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பில் அடையாளம் காணப்பட்ட பயனாளிகளின் குடும்பங்களை உள்ளடக்கியதாகும்.
PMJAY திட்டமானது 60% மத்திய அரசாலும் மீதத்தொகை அந்தந்த மாநில அரசுகளாலும் நிதியளிக்கப்படும்.