TNPSC Thervupettagam

பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதி (PMNRF)

March 30 , 2020 1705 days 557 0
  • இது அப்போதைய பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்களால் ஏற்படுத்தப் பட்டது.
  • இந்த நிதியின் தலைவர் பிரதமர் ஆவார்.
  • இது பாராளுமன்றத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டது அல்ல.
  • PMNRF (Prime Minister’s National Relief Fund) ஆனது இயற்கைப் பேரிடர் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர்கள் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகப் பயன்படுத்தப் படுகின்றது.
  • இதில் அமில வீச்சு, விபத்துகள் மற்றும் கலவரங்கள் ஆகியவையும் உள்ளடங்கும்.
  • மேலும் இது சிறுநீரக மாற்று, வெப்பம் சார்ந்த சிகிச்சை மற்றும் அறுவை ச்சிகிச்சைகளுக்காகவும் வேண்டி மக்களுக்கு ஒதுக்கப் படுகின்றது.
  • இது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் தன்னார்வமாக வழங்கப்படும் நிதியை மட்டும் ஏற்றுக் கொள்கின்றது.
  • அரசின் பட்ஜெட்டில் இருந்து வரும் நிதி அல்லது பொதுத் துறை நிறுவனங்களின் மீதித் தொகை ஆகியவை இதில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்