TNPSC Thervupettagam

பிரதம மந்திரியின் மூன்று நாடுகளின் சுற்றுப் பயணம் (ஆப்பிரிக்கா)

July 27 , 2018 2188 days 596 0
  • பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
  • ருவாண்டாவிற்கு விஜயம் செய்த முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.
  • பாதுகாப்பு, வணிகம், வேளாண்மை, தோல் மற்றும் அது தொடர்பான உற்பத்திப் பொருட்கள் மற்றும் பால்பொருட்கள் ஆகிய துறைகளுக்கான எட்டு ஒப்பந்தங்களில் இந்தியா மற்றும் ருவாண்டா கையெழுத்திட்டுள்ளன.
  • ருவாண்டா அரசின் கிரிங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக ரிவேரூ கிராமப்பகுதி மக்களுக்கு 200 பசுமாடுகளை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார்.
  • பாதுகாப்பு ஒத்துழைப்பு, அரசு முறை மற்றும் அலுவல் சார்ந்த கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு, பண்பாடு பரிமாற்ற திட்டம் மற்றும் மூலப்பொருள் சோதனை ஆய்வுக்கூடம் ஆகியவற்றிற்கான நான்கு ஒப்பந்தங்களில் இந்தியா மற்றும் உகாண்டா கையெழுத்திட்டுள்ளன.
  • கம்பாலாவில் உள்ள உகாண்டா புற்றுநோய் சிகிச்சை நிறுவனத்திற்கு புற்றுநோய் சிகிச்சை எந்திரத்தினை பரிசளிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்