பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் (PMML) சங்கம் மற்றும் நிர்வாகக் குழுவை மத்திய அரசு மறுசீரமைத்துள்ளது.
முன்னதாக 29 உறுப்பினர்களைக் கொண்டிருந்த நிர்வாகக் குழுவானது, தற்போது 34 உறுப்பினர்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
நிருபேந்திர மிஸ்ரா இந்த அமைப்பின் தலைவராக மீண்டும் ஐந்து ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, முன்னாள் நிதி ஆயோக் துணைத் தலைவர் இராஜீவ் குமார், ஓய்வு பெற்ற இராணுவத் தலைவர் ஜெனரல் சையத் அதா ஹஸ்னைன், பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் சேகர் கபூர் ஆகியோர் இதன் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் NMML சங்கத்தின் தலைவராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் அதன் துணைத் தலைவராகவும் உள்ளனர்.