TNPSC Thervupettagam

பிரதமரின் சென்னை வருகை

April 11 , 2023 596 days 284 0
  • தமிழ்நாட்டில் உள்ள சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஒருங்கிணைந்த விமான நிலைய முனையக் கட்டிடத்தினைப் பிரதமர் திறந்து வைத்தார்.
  • இது 100 பயண ஆயத்த முகப்புகள், 108 புலம்பெயர்வு முகப்புகள் ஆகியவற்றினை கொண்டுள்ளதோடு, இது ஆண்டிற்கு 35 மில்லியன் பயணிகளை கையாளக் கூடியது.
  • சென்னை முதல் கோவை வரையிலான வந்தே பாரத் விரைவு இரயில் சேவையினை சென்னையின் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய இரயில் நிலையத்திலிருந்து கொடியசைத்துப் பிரதமர் துவக்கி வைத்தார்.
  • இது மாநிலத்தின் இரண்டாவது வந்தே பாரத் இரயில் என்பதோடு மேலும் இது தமிழக மாநிலத்திற்குள்ளேயே இயக்கப்படும் முதல் வந்தே பாரத் இரயிலாகும்.
  • முதலாவது வந்தே பாரத் விரைவு இரயில் சேவையானது, சென்னை முதல் மைசூரு வரையில் பெங்களூரு வழியாக இயக்கப் படுகிறது.
  • தாம்பரம் மற்றும் செங்கோட்டை இடையிலான வாரத்திற்கு மும்முறை இயங்கும் ஒரு புதிய விரைவு இரயில் சேவையினையும் பிரதமர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • சென்னையில் இருந்து திருவாரூர்-காரைக்குடி ஆகியவற்றுக்கு இடையேயான முதல் இரயில் சேவையும் இதுவே ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்