சென்னை மெட்ரோ ரயிலின் ஊதாப் பட்டையின் கடைசிப் பகுதியையும், தரையின் அடியில் இயங்கும் ஆறு மெட்ரோ ரயில் நிலையங்களையும் திருப்பூரிலிருந்து காணொளித் தொலைக்காட்சி மூலம் பிரதமர் துவக்கி வைத்தார்.
அவர் கீழ்க்காணும் வசதிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நவீனமயமாக்கல் (பகுதி - III)
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைக்கப்பட்ட நுழைவாயில் கட்டிடம்
திருப்பூரில் 100 படுக்கை வசதிகள் கொண்ட தொழிலாளர் காப்பீட்டு மருத்துவமனை.
மேலும் அவர் பிபிசிஎல் எண்ணூர் கடற்கரை நிலையக் கட்டமைப்பையும் முழுமையாக தானியங்கி வசதி செய்யப்பட்ட எண்ணெய்க் கிடங்கையும் அதன் விநியோக வசதிகளையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.