TNPSC Thervupettagam

பிரதமரின் தென்கிழக்கு ஆசிய பயணம்

June 3 , 2018 2371 days 689 0
  • தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகியவற்றுடன் இந்தியாவின் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் தமது 3 நாடுகள் பயணத்தை துவங்கியுள்ளார்.
  • இந்தியாவும் இந்தோனேசியாவும் பிரதமரின் ஜகார்த்தா சந்திப்பின் போது இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவுடன் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
  • இரு நாடுகளும் 2019-20 ஆம் ஆண்டில் தமது ராஜ்ஜிய உறவுகளின் 70-வது நினைவு ஆண்டைக் கொண்டாட உள்ளன.
  • வியாபாரங்களுக்குள்ளேயும், அரசிற்கும் வியாபாரத்திற்குள்ளேயும் நடந்த பேச்சுக்களின் படி பட்டம் வடிவமைக்கும் கலையை புகழ்படுத்தி மேம்படுத்திட அகமதாபாத்தின் பட்ட அருங்காட்சியகம் மற்றும் லயாங் லயாங் ஆகியவற்றுக்கிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
  • இந்திய தொல்பொருள் அருங்காட்சியகமும் இந்தோனேசியாவின் PT தாமன் விசாத கண்டி போரோபுதூர், பிரம்பணன் மற்றும் ராது போகோ என்ற அமைப்பும் [போரோபுதூர் மற்றும் பிரம்பணன் ஆகிய இடங்களை பாதுகாத்து மேம்படுத்துவதற்கான தேசிய அதிகார அமைப்பு] இணைந்து உலக கலாச்சார புராதன சின்னமான பிரம்பணன் கோவிலையும் தாஜ் மகாலையும் அழகுபடுத்திட ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்