நகர்ப்புற ஏழைகளின் பயனிற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ் 1.5 இலட்சம் மலிவு வீடுகளின் கட்டுமானத்திற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் (Union Ministry of Housing & Urban Affairs) ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடர்பான முடிவானது தற்போது நடைபெற்ற மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுவின் (Central Sanctioning and Monitoring Committee) 34-வது சந்திப்பில் எடுக்கப்பட்டது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டத்தின் நோக்கமானது 2022-ல் அனைத்து நகர்ப்புற ஏழைகளுக்கும் வீடுகளை வழங்குவதாகும்.
நாடு முழுவதும் இரண்டு கோடி வீடுகளைக் கட்டுவதே இதன் நோக்கமாகும்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஏழைகள், பொருளாதார ரீதியில் நலிவுற்ற பிரிவின் (Economically Weaker Sections -EWS) கீழ் வாழும் மக்கள், குறைந்த வருமானக் குழுவைச் (LIG -Low income Group) சேர்ந்தவர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையோராவர்.