TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறத் திட்ட விருதுகள் 2021

November 3 , 2022 627 days 341 0
  • செயல்படுத்தல் மற்றும் புத்தாக்கத்திற்கான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறத் திட்ட விருதுகள் ஆனது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறத் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது.
  • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறத் திட்டமானது, இந்தியாவின் நகர்ப் புறங்களில் நிலவும் வீட்டுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டிற்குள் 1.12 கோடி வீடுகளை உருவாக்குவதை இது இலக்காகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தின் நோக்கங்களை அடைவதற்காக மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டு விருதுகள் ஆனது இந்த விருதுகளின் 2வது பதிப்பாகும்.
  • மாநிலங்கள் பிரிவில் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு ஆகியவை முன்னணி இடம் வகிக்கின்றன.
  • 2019 ஆம் ஆண்டிற்கான விருதுகளைப் பெறும் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியனவாகும்.
  • வடகிழக்கு மற்றும் மலைப்பாங்கான மாநிலங்கள் பிரிவில், திரிபுரா முதலிடத்தில் உள்ளது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான விருதையும் இம்மாநில அரசு வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்