TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி இராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது 2024

December 29 , 2024 23 days 110 0
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், ஏழு பிரிவுகளில் 17 குழந்தைகளுக்கு பிரதமரின் தேசிய விருதினை வழங்கினார்.
  • கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவை, விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய ஏழு முதன்மைப் பிரிவுகளில் மேற்கொள்ளப் பட்ட மிக அசாதாரணச் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • இந்த விருதினைப் பெறுபவதற்கு ஏழு சிறுவர்கள் மற்றும் 10 சிறுமிகள்-14 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • தமிழகத்தைச் சேர்ந்த சிந்தூர ராஜா (15) நடுக்குவாதம் உள்ள நோயாளிகளுக்கு சுய நிலைப்பாட்டுச் சாதனங்களை உருவாக்கியதற்காக இந்த விருதினைப் பெற்றார்.
  • செங்கல்பட்டைச் சேர்ந்த கர்நாடக இசைப் பிரிவு மாணவரான ஜனனி நாராயணன் (14) என்பவரும் இந்த விருதைப் பெற்றுள்ளார்.
  • 2023-24 ஆம் ஆண்டில் தமிழக அரசினால் நிறுவப் பட்ட கலைமாமணி விருதையும் இவர் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்