TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி உச்சதார் சிக்சா அபியான்

August 17 , 2023 340 days 206 0
  • மாநிலப் பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியின் தரத்தை மிக மேம்படுத்துவதற்காக  கல்வி அமைச்சகம் தொடங்கிய திட்டத்திற்கான புதிய பெயர் PM-USHA என்பதாகும்.
  • இதற்காக, 2023-24 மற்றும் 2025-26 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 12,926.10 கோடி ரூபாய்ச் செலவின மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
  • PM-USHA திட்டத்தில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேச அரசுகள் பங்கேற்க விருப்பம் தெரிவிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • PM USHA திட்டத்தின் கீழான 40% செலவினங்களை மாநில அரசுகள் ஏற்கின்றன.
  • கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் மத்திய கல்வித் துறை அமைச்சகத்துடனான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) இன்னும் கையெழுத்திடாமல் உள்ளன.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியைப் பெறுவதற்காக தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவதைக் கட்டாயமாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்