TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டம் – இலக்கு நிறைவேற்றம்

August 5 , 2018 2179 days 704 0
  • மத்திய அரசு, பிரதான் மந்திரி உஜ்வாலாத் திட்டத்தின் (Pradhan Mantri Ujjawala Yojana - PMUY) கீழ் ஏறக்குறைய 8 மாதங்களுக்கு முன்பாகவே (35 மாதங்களுக்குப் பதில் 27 மாதங்களில்) 5 கோடி இலவச எல்பிஜி இணைப்புகள் அளிக்கும் இலக்கினை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் ஏறக்குறைய 65 சதவிகித இணைப்புகளை அளித்துள்ள 6 மாநிலங்கள் உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், மத்தியப் பிரதேசம் ராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகியவையாகும்.
  • ஒட்டு மொத்த பயனாளிகளில் ஏறக்குறைய 47 சதவிகிதத்தினர் சமூகத்தில் எஸ்சி/எஸ்டி போன்ற பின்தங்கிய வகுப்பினர் ஆவர்.
  • நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இறப்புகளுக்கு காரணமாக உள்ள வீட்டினுள் ஏற்படும் உட்புற காற்று மாசுவை தீர்க்க அரசு எடுத்துள்ள ஒரு சரியான நடவடிக்கையாக இத்திட்டம் (PMUY) உள்ளதென்று உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்து இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்