கிழக்கிந்தியப் பகுதிகளுக்கு எரிபொருட்களை கொண்டு செல்வதற்காக, பிரதான் மந்திரி உர்ஜா கங்கா இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தின் கீழ் மற்றுமொரு 400 கி.மீ. நீளமுள்ள எரிவாயு குழாய் ஒன்றினை அமைக்க அரசு எரிவாயு நிறுவனமான கெயில் இந்தியா (GAIL India) நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
பீகாரின் டோபி (Dobhi) முதல் மேற்கு வங்கத்தின் துர்காபூர் வரை 400 கி.மீ. நீளமுடைய இயற்கை எரிவாயு குழாய் அமைக்கப்பட உள்ளது.
இந்த உத்தரவுகளுடன் சேர்த்து 2100 கிலோமீட்டர் தூரமுடைய ஜகதீஷ்பூர் – ஹால்டியா மற்றும் பொகாரோ – தம்ரா இயற்கை எரிவாயு குழாய் திட்டம் ஆகியவற்றுக்கான குழாய் வழங்கும் உத்தரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரதான் மந்திரி உர்ஜா கங்கா என்றறியப்படும் இந்த மதிப்புமிக்க 2655 கிலோமீட்டர் நீளமுடைய JHBDPL (Jagdishpur-Haldia & Bokaro-Dhamra Natural Gas Pipeline project) திட்டம், தற்போது மேற்குக் கடற்கரையிலிருந்து வரும் முக்கிய நீண்ட குழாய் பாதை முடியும் இடமான உத்தரபிரதேசத்தின் ஜகதீஷ்பூரில் ஆரம்பித்து மேற்கு வங்கத்தின் ஹால்டியாவிற்கும் ஒடிசாவின் தம்ராவிற்கும் செல்லும்.
அந்த குழாய் பாதையானது, பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் உள்நாட்டு, தொழில், வர்த்தக மற்றும் போக்குவரத்துத் துறைகளின் தேவைகளுக்காக இயற்கை எரிவாயுவை கொண்டு செல்லும்.