TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி உள்ளிருப்புப் பயிற்சி திட்டம்

October 9 , 2024 14 hrs 0 min 20 0
  • பிரதான் மந்திரி உள்ளிருப்புப் பயிற்சி திட்டம் ஆனது, அக்டோபர் 03 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டம் ஆனது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளையோர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை முக்கிய நோக்கமாக  கொண்டு ள்ளது.
  • இது நடப்புலக வணிகச் சூழல் குறித்த புரிதலை வழங்குவதன் மூலம் இந்தியாவில் இளையோர்களுக்கு வேலைவாய்ப்பை மேம்படுத்தும்.
  • இத்திட்டம் ஆனது இந்தியாவில் திறன் இடைவெளியைக் குறைப்பதற்கும் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்குமான ஒரு மாறுதல் மிக்க வாய்ப்பை பிரதிபலிக்கிறது.
  • இது இளையோர்களுக்கு வேலையில் பயிற்சி அளிப்பது மற்றும் நடப்புலக வேலைச் சூழலை வெளிப்படுத்துவதற்கான திட்டம் ஆகும்.
  • DBT (நேரடிப் பயன் பரிமாற்றம்) மூலம் மத்திய அரசிடமிருந்துப் பயிற்சியாளர்களுக்கு நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியினால் வழங்கப்படும் கூடுதல் 500 ரூபாய் ஈட்டுத் தொகையுடன், மாதாந்திர உதவித் தொகையாக 4,500 ரூபாய் வழங்கப்படும்.
  • முழுநேர வேலையில் ஈடுபடாத 21 முதல் 24 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த ஓராண்டு காலப் பயிற்சித் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்