TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி கிராமீன் டிஜிட்டல் சக்சரதா அபியான்

October 7 , 2017 2477 days 762 0
  • 2019-க்குள் டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற 6 கோடி கிராம மக்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டது இத்திட்டம்.
  • இது அரசினுடைய டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஓர் உள்ளார்ந்த பகுதியாகும்.
  • இது உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் கல்வியறிவுக்கான திட்டங்களில் ஒன்றாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இத்திட்டம் குடிமக்கள் தங்களிடையே டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வைத்தலையும் நோக்கமாக கொண்டது.
  • தகவல்களை அணுகிட வைப்பதன் மூலமும், கணினி மற்றும் டிஜிட்டல் சாதனங்களை இயக்கிட தேவையான திறன்கள் மற்றும் டிஜிட்டல் அறிவை அளிப்பதன் மூலமும் குடிமக்களை மேம்படுத்த இத்திட்டம் உதவும்.
  • டிஜிட்டல் கல்வி சார்பாக பல்வேறு பொது சேவை நிறுவனங்கள் மற்றும் கிராம அளவிலான தொழில்முனைவோர்கள் பங்குபெறும் இத்திட்டத்தின் கீழ் உள்ள டிஜிட்டல் சக்ஷரதா அபிநந்தன் சமோரா நிகழ்ச்சி அடுத்த மாதம் காந்திநகரில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்