TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி சுரக்ஷித் மாத்ரிவ அபியான்

January 20 , 2018 2373 days 1511 0
  • கர்ப்பக் கால பரிசோதனைத் திட்டமான பிரதான் மந்திரி சுரக்ஷித் மாத்ரிவ் அபியான் (Pradhan Mantri Surakshit Matriva Abhiyan – PMSMA) திட்டத்தின் கீழ் கர்ப்பகால உடல் பரிசோதனை செய்துக்கொண்ட பெண்களின் எண்ணிக்கை ஒரு கோடியினை கடந்திருக்கிறது.
  • இந்த திட்டம் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
  • பாதுகாப்பான பிரசவத்தை, ஊரகப்பகுதிகள் மற்றும் நகரப்பகுதிகளில் அரசு சுகாதார மையங்களிலும் மருத்துவமனைகளிலும் ஏற்படுத்துவதை உறுதி செய்திட ஒரு விரிவான,  இலவச மற்றும் தரமான கர்ப்ப கால பரிசோதனைகள் பிரதி மாதம் 9ம் தேதி கர்ப்பிணிப் பெண்களுக்கு நடத்திட இத்திட்டம் உறுதி பூண்டுள்ளது.
  • இந்த திட்டம் நாடு முழுவதும் தனியார்துறை மருத்துவர்களின் பங்களிப்போடு நடத்தப்படுகிறது.
  • இந்தத் திட்டம் கர்ப்பிணிப் பெண்களின் 3 முதல் 6 மாத கால அளவிற்கு மட்டுமே பொருந்தும்.
  • அதிகாரம் அளிக்கப்படாத மாநிலங்களின் செயற்குழு (Non Empowered States Action Group) என்ற பிரிவில் மகாராஷ்டிரா மாநிலம் அதிக அளவிலான பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது.
  • அதிகாரமளிக்கப்பட்ட மாநிலங்களுக்கான பிரிவில் (Empowered States Action Group) இராஜஸ்தான் மாநிலம் அதிக பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்