TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி சுவஸ்தியா சுரக்ஷா யோஜனா திட்டம் – தொடர்ச்சி

May 9 , 2018 2395 days 1357 0
  • 12-வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தையும் (12th Five Year Plan) தாண்டி 2019-20 ஆண்டு வரையிலும் பிரதான் மந்திரி சுவஸ்தியா சுரக்ஷா யோஜனா திட்டம் (Pradhan Mantri Swasthya Suraksha Yojana-PMSSY) தொடர்வதற்கு பிரதமர் தலைமையிலான மத்திய கேபினேட் குழு அனுமதியினை வழங்கியுள்ளது.

 பிரதான் மந்திரி சுவஸ்தியா சுரக்ஷா யோஜனா திட்டம்

  • நாட்டில் தரமான மருத்துவ கல்வி கிடைப்பதற்காக மலிவான/நம்பகமான (affordable/reliable) மூன்றாம் நிலை சுகாதாரச் சிகிச்சை சேவைகள் (tertiary healthcare services) மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளைப் பெறுவதில் காணப்படுகின்ற பிராந்திய சம நிலையின்மைகளை (regional imbalances) சரி செய்வதே பிரதான் மந்திரி சுவஸ்தியா சுரக்ஷா யோஜனா திட்டத்தின் நோக்கமாகும்.
  • இத்திட்டமானது 2003-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. வெவ்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அப்பாற்பட்டு இந்தியாவினுடைய பல்வேறு பிராந்தியங்களில் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவக் கல்லூரிகளை இத்திட்டம் ஏற்படுத்துகின்றது.
  • பொது சுகாதாரம் மீது உள்கட்டமைப்புகளை உருவாக்குதலோடு தொடர்புடைய வெவ்வேறு மத்திய நிதியுதவித் திட்டங்கள் (centrally sponsored schemes) மூலம் இத்திட்டத்திற்கு நிதியளிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்