TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி சூர்ய கர் - முஃப்த் பிஜ்லி யோஜனா திட்டத்திற்கான புதிய வழிகாட்டுதல்கள்

January 21 , 2025 6 hrs 0 min 39 0
  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) ஆனது, பிரதான் மந்திரி சூர்ய கர் முஃப்த் பிஜ்லி யோஜனா என்ற திட்டத்திற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • மேற்கூரையில் பொருத்தப்பட்ட சூரிய மின்னாற்றல் உற்பத்தி அமைப்புகளை நிறுவுவதற்கான இரண்டு கூடுதல் கட்டண மாதிரிகளுக்கு இது அனுமதிக்கிறது.
  • இந்த நடவடிக்கை என்பது இந்தியா முழுவதும் உள்ள குடியிருப்பு வீடுகளுக்கு இந்த செயல்முறையை மிகவும் தகவமைப்பு மிக்கதாகவும், பாதுகாப்பானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் புதிய வாய்ப்புகளுடன், மிகவும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்தத் திட்டத்தினைப் பயன்படுத்தி, சூரிய சக்திக்கு எளிதாக மாறலாம்.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேவை நிறுவன (RESCO) மாதிரியின் கீழ், மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் சூரிய மின்னாற்றல் உற்பத்தி செய்யும் தகடுகளை நிறுவி அவற்றைப் பராமரிக்கின்றன.
  • இதில் நுகர்வோர் எந்த நிறுவல் செலவினங்களும் இல்லாமல், அவர்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மட்டும் பணம் செலுத்தலாம்.
  • பயன்பாடு சார்ந்த ஒருங்கிணைப்பு மாதிரியின் கீழ், அரசு நிறுவனங்கள் அல்லது DISCOM நிறுவனங்கள் ஆனது வீடுகளுக்கான நிறுவல் செயல்முறையை மேலாண்மை செய்து ஆதரவை வழங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்