பிரதான் மந்திரி சூர்ய கர் - முஃப்த் பிஜ்லி யோஜனா திட்டத்திற்கான புதிய வழிகாட்டுதல்கள்
January 21 , 2025 5 days 63 0
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) ஆனது, பிரதான் மந்திரி சூர்ய கர் முஃப்த் பிஜ்லி யோஜனா என்ற திட்டத்திற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மேற்கூரையில் பொருத்தப்பட்ட சூரிய மின்னாற்றல் உற்பத்தி அமைப்புகளை நிறுவுவதற்கான இரண்டு கூடுதல் கட்டண மாதிரிகளுக்கு இது அனுமதிக்கிறது.
இந்த நடவடிக்கை என்பது இந்தியா முழுவதும் உள்ள குடியிருப்பு வீடுகளுக்கு இந்த செயல்முறையை மிகவும் தகவமைப்பு மிக்கதாகவும், பாதுகாப்பானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வாய்ப்புகளுடன், மிகவும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்தத் திட்டத்தினைப் பயன்படுத்தி, சூரிய சக்திக்கு எளிதாக மாறலாம்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேவை நிறுவன (RESCO) மாதிரியின் கீழ், மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் சூரிய மின்னாற்றல் உற்பத்தி செய்யும் தகடுகளை நிறுவி அவற்றைப் பராமரிக்கின்றன.
இதில் நுகர்வோர் எந்த நிறுவல் செலவினங்களும் இல்லாமல், அவர்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மட்டும் பணம் செலுத்தலாம்.
பயன்பாடு சார்ந்த ஒருங்கிணைப்பு மாதிரியின் கீழ், அரசு நிறுவனங்கள் அல்லது DISCOM நிறுவனங்கள் ஆனது வீடுகளுக்கான நிறுவல் செயல்முறையை மேலாண்மை செய்து ஆதரவை வழங்குகின்றன.