மத்திய அமைச்சரவை பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (PM-JANMAN) திட்டத்தினை அங்கீகரித்துள்ளது.
இது எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்கள் (PVTGs) எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதற்கான ஒரு விரிவான முன்னெடுப்பு ஆகும்.
18 மாநிலங்கள் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு ஒன்றியப் பிரதேசம் ஆகியவற்றில் வாழும் 75 சமூகங்கள் எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினக் குழுக்களாக (PVTGs) அடையாளம் காணப்பட்டுள்ளன.
பழங்குடியினர் விவகார அமைச்சகம் உட்பட ஒன்பது அமைச்சகங்களின் 11 முக்கியத் திட்டங்களை செயல்படுத்துவதை இது நோக்கமாக கொண்டுள்ளது.