TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி மத்சய சம்பாதா யோஜனா

May 23 , 2020 1521 days 746 0
  • இந்த் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு தனது ஒப்புதலை வழங்கி உள்ளது.
  • இது நீலப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான ஒரு திட்டமாகும்.
  • இது அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு, அதாவது 2020-21 நிதியாண்டிலிருந்து 2024-25 ஆம் நிதியாண்டு வரையிலான காலத்திற்குச் செயல்படுத்தப்பட இருக்கின்றது.
  • மத்திய மீன்வள, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால் வளத் துறை அமைச்சகமானது இதனைச் செயல்படுத்தும் அமைப்பாகும்.
  • இது மத்திய  அரசுத் திட்டம் (CS - Central Sector Scheme) மற்றும் மத்திய அரசினால் ஆதரிக்கப்படும் திட்டம் (CSS - Centrally Sponsored Scheme) ஆகிய 2 கூறுகளின் மூலம் செயல்படுத்தப்பட இருக்கின்றது.
  • மத்திய அரசுத் திட்டம் (CS) – முழுத் திட்டத்திற்கான செலவும் மத்திய அரசினால் மேற்கொள்ளப்படும் (100% மத்திய அரசு நிதியுதவி).
  • CSS கூறானது பயனாளியைச் சாராத மற்றும் பயனாளியைச் சார்ந்த என்ற 2 துணைக் கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • இதன் கீழ், முழுத் திட்டத்திற்கான செலவினமும் மத்திய மற்றும் மாநில அரசினால் பயனாளியைச்  சாராத துணைக் கூறின் அடிப்படையில் பின்வருமாறு பகிர்நது கொள்ளப்படுகின்றது.
    • வட கிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்கள் - 90% மத்திய அரசினாலும் 10% மாநில அரசினாலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.
    • இதர மாநிலங்கள் - 60% மத்திய அரசினாலும் 40% மாநில அரசினாலும் பகிர்ந்து கொள்ளப் படுகின்றது.
    • ஒன்றியப் பிரதேசங்கள் (சட்டமன்றம் கொண்டுள்ளவை மற்றும் சட்டமன்றம் இல்லாதவை) - 100% நிதி மத்திய அரசினால் அளிக்கப்படுகின்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்