TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டம்

November 25 , 2020 1464 days 623 0
  • இந்தத் திட்டத்தின் திறன் மேம்பாட்டுக் கூறுகளை உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • ஆத்ம நிர்பர் பாரத் அபியான் என்ற ஒரு திட்டத்தின் கீழ் இது தொடங்கப்பட்டது.
  • இது உணவு பதப்படுத்தும் அமைச்சகத்தால் செயல்படுத்தப் படுகிறது.
  • இது மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படும் ஒரு திட்டமாகும்.
  • இந்தத் திட்டமானது 2020-21 ஆண்டு முதல் 2024-25 ஆண்டு வரை ஒரு ஐந்து ஆண்டு காலத்திற்குச் செயல்படுத்தப்பட உள்ளது.
  • மேலும் 2022 ஆம் ஆண்டிற்குள் இந்திய நாடு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் இலக்கை அடைய இது உதவும்.
  • சீனாவிற்கு அடுத்தபடியாக உலகில் பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவில் இருபது வெவ்வேறு வேளாண் காலநிலைப் பகுதிகள் உள்ளன.
  • மழை, மண் வகைகள், வெப்பநிலை மற்றும் நீர் ஆகியவை கிடைப்பதன் அடிப்படையில் வேளாண்-காலநிலைப் பகுதிகள் வரையறுக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்