TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஷ்கர்

January 26 , 2022 910 days 504 0
  • பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஷ்கர் விருது பெற்றவர்களுடன் பிரதமர் மோடி அவர்கள் காணொலி வாயிலாக உரையாடினார்.
  • அவர் பிளாக்செயின் (தொடர் சங்கிலி) என்ற ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்னிலக்க முறையில் சான்றிதழ்களை வெற்றியாளர்களுக்கு வழங்கினார்.
  • விருது பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்குவதற்காக வேண்டி முதல் முறையாக இந்தத் தொழில்நுட்பமானது பயன்படுத்தப்பட்டது.
  • 14 சிறுமிகள் உட்பட 29 குழந்தைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
  • புத்தாக்கம், விளையாட்டு, கல்வியியல் சாதனைகள், சமூக சேவை, கலை & கலாச்சாரம் மற்றும் துணிச்சல் (வீரம்) ஆகிய 6 துறைகளில் இவர்களுக்கு விருதுகள் வழங்கப் பட்டன.
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த விசாலினி N.C. மற்றும் அஷ்வதா பிஜூ ஆகியோர் புத்தாக்கத் துறையில் விருதுகளைப் பெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்