TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா

May 9 , 2018 2393 days 1207 0
  • பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா (Pradhan Mantri Vaya Vandana Yojana-PMVVY) திட்டத்தின் கீழ் முதலீட்டு வரம்பை (investment limit) 7.5 லட்சத்திலிருந்து 15 லட்சமாக அதிகரிக்க பிரதமர் தலைமையிலான மத்திய கேபினேட் குழுவானது அனுமதி வழங்கி உள்ளது.
  • பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா திட்டமானது வயதான காலத்தின் போது சமூகப் பாதுகாப்பினை வழங்குவது (social security), 60 வயது மற்றும் அதற்கு மேலான வயதுடையவர்களைப் பாதுகாப்பது ஆகிய நோக்கங்களுக்காக ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (e Insurance Corp -LIC) மூலம் அமல்படுத்தப்படுகின்றது.
  • நிச்சயமற்ற சந்தை நிலைமைகள் காரணமாக வட்டி வீதத்தில் எதிர்காலத்தில் ஏற்படும் சரிவுகளிலிருந்து அவர்களை பாதுகாப்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.
  • பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா திட்டமானது 10 ஆண்டு காலத்திற்கு ஆண்டிற்கு 8 சதவீதம் எனும் அளவிலான உத்திரவாதமுடைய வருமான அளவின் அடிப்படையில் (guaranteed rate of return of 8 percent) உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத்தை பயனாளிகளுக்கு வழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்