TNPSC Thervupettagam
November 29 , 2017 2581 days 1119 0
  • அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டெமி லெ நெல் பீட்டர்ஸ் 2017 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாக ( Universe) மகுடம் சூட்டப்பட்டுள்ளார்.
  • இவர் 39 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபஞ்ச அழகிப் பட்டத்தை பெறும் இரண்டாவது தென் ஆப்பிரிக்க நாட்டவராவார்.
  • 1978-ல் முதல் முறையாக மார்கரேட் கார்டினர் எனும் தென் ஆப்பிரிக்க அழகி பிரபஞ்ச அழகியாக மகுடம் சூட்டப்பட்டார்..
  • கொலம்பியாவின் லாரா கொன்ஜாலெஜ் இரண்டாவது இடத்தையும், மிஸ் ஜமைக்காவான டவினா பென்னெட் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
  • பிரபஞ்ச அழகிப் போட்டியானது மிஸ் யூனிவர்ஸ் கழகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச அழகிகள் அணி வகுப்பாகும்.
  • பிரபஞ்ச அழகி, உலக அழகி, புவி அழகி, மிஸ் சரவதேச அழகி ஆகிய நான்கும் நான்கு பெரும் சர்வதேச அழகிகளின் அணிவகுப்பு (Big four international Beauty Pageants) என்றழைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்