அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டெமி லெ நெல் பீட்டர்ஸ் 2017 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாக ( Universe) மகுடம் சூட்டப்பட்டுள்ளார்.
இவர் 39 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபஞ்ச அழகிப் பட்டத்தை பெறும் இரண்டாவது தென் ஆப்பிரிக்க நாட்டவராவார்.
1978-ல் முதல் முறையாக மார்கரேட் கார்டினர் எனும் தென் ஆப்பிரிக்க அழகி பிரபஞ்ச அழகியாக மகுடம் சூட்டப்பட்டார்..
கொலம்பியாவின் லாரா கொன்ஜாலெஜ் இரண்டாவது இடத்தையும், மிஸ் ஜமைக்காவான டவினா பென்னெட் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
பிரபஞ்ச அழகிப் போட்டியானது மிஸ் யூனிவர்ஸ் கழகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச அழகிகள் அணி வகுப்பாகும்.
பிரபஞ்ச அழகி, உலக அழகி, புவி அழகி, மிஸ் சரவதேச அழகி ஆகிய நான்கும் நான்கு பெரும் சர்வதேச அழகிகளின் அணிவகுப்பு (Big four international Beauty Pageants) என்றழைக்கப்படும்.