TNPSC Thervupettagam

பிரம்மபுத்திரா மற்றும் சட்லெஜ் தரவுப் பகிர்வு

June 10 , 2018 2364 days 709 0
  • ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு, சீனா சட்லெஜ் மற்றும் பிரம்மபுத்திரா நதிகளின் மீதான நீரியல் தரவுகளை (Hydrological Data) இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதை மீண்டும் தொடங்கி உள்ளது.
  • வெள்ளம் காரணமாக நீரியல் தரவுகள் பெறப்படுகின்ற பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன என்பதைக் காரணம் காட்டி இந்த தரவுகளின் பகிர்வு நடைமுறையை சீனா நிறுத்திக் கொண்டது
  • இந்தத் தரவுப் பகிர்வு நிறுத்தச் செயல்பாடானது உச்ச பருவநிலை காலத்தின் போது, இரு நாடுகளுக்கிடையே 73 நாட்களாக நீடித்த டோக்லாம் பிரச்சனையோடு (Doklam stand-off) ஒருங்கமைந்தது.
  • கடந்த மார்ச் மாதம் நீரியல் தரவுகள் பகிர்வு தொடர்பாக நடைபெற்ற இருதரப்பினரிடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்போது நீரியல் தரவுகளின் பகிர்வை சீனா மீண்டும் தொடங்கியுள்ளது.
  • அக்டோபர் மாதம் வரை தினசரி இருமுறை நீரியல் தரவுகள் இந்தியாவுடன் பகிரப்படும்.
  • பிரம்மபுத்திரா நதியின் மைய நீரோட்டப் பகுதியில் அமைந்துள்ள யான்கன், நுஸியா, நுகெஷா ஆகிய மூன்று நீரியல் நிலையங்களிலிருந்து பிரம்மபுத்திரா தொடர்பான நீரியல் தரவுகளை வழங்க சீனா தொடங்கியுள்ளது. பிரம்மபுத்திரா நதியானது சீனாவில் யார்லுங் ஜங்போ (Yarlung Zangbo) என்றழைக்கப்படுகின்றது.
  • சட்லெஜ் நதிக்கு டிசாடா (Tsada) எனுமிடத்தில் உள்ள நீரியல் நிலையத்திலிருந்து தரவுகள் பகிரப்படுகின்றன. சட்லெஜ் நதியானது சீனாவில் லாங்கென் ஜங்போ (Langqen Zangbo) என்றழைக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்