TNPSC Thervupettagam

பிரம்மோஸ் அடுத்த தலைமுறை நுட்பத்திலான சீர்வேக எறிகணை

February 18 , 2025 4 days 34 0
  • இந்தியாவின் பிரம்மோஸ் NG (அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திலான) எறிகணை அமைப்பின் உருவாக்கமானது நிறைவு நிலையை எட்டும் நிலைகளில் உள்ளது.
  • பிரம்மோஸ் NG ஆனது அதன் முன்னோடி வடிவினைப் போலவே அதே திறன்களைக் கொண்ட ஒரு மெல்லிய வடிவிலான எறிகணையாகும்.
  • பிரம்மோஸ் NG இலகுவானது, சிறியது மற்றும் அடக்கமானது என்பதால் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட சுகோய்-30MKI ரக போர் விமானம் மற்றும் இங்கு உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட தேஜாஸ் எனும் இலகுரகப் போர் விமானம் ஆகியவற்றில் பொருத்தப் படுவதற்கு இணக்கமாக இருக்கும்.
  • இந்த எறிகணை ஆனது 290 கி.மீ தூரம் மற்றும் 3.5 மேக் வரை வேகம் கொண்டது.
  • பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு அடுத்தபடியாக, இந்த எறிகணை அமைப்புகளை வாங்கும் இரண்டாவது நாடாக இந்தோனேசியா மாற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்